முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி இனிப்பு வழங்கினார்


முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி இனிப்பு வழங்கினார்
x

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி இனிப்பு வழங்கினார்

திருப்பத்தூர்

அ.தி.மு.க. பொதுக் குழு செல்லும் என சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பையொட்டி திருப்பத்தூர் நகர அ.தி.மு.க. சார்பில் திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகே நகர செயலாளர் டி.டி.குமார் தலைமையில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி, எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே.சி.வீரமணி கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் டாக்டர் என்.திருப்பதி, மாவட்ட பாசறை செயலாளர் டி.டி.சி.சங்கர் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story