ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில்முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் ஓட்டு கேட்டார்


ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில்முன்னாள் அமைச்சர் சண்முகநாதன்         ஓட்டு கேட்டார்
x

ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் ஓட்டு கேட்டார்.

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகிறார் இவரை ஆதரித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்து வருகிறார்கள். அதன்படி நேற்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட பி.பி.அக்ரஹாரம் பகுதியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு கேட்டார். அப்போது அவர், அ.தி.மு.க. அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கி கூறியும், துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்தும் வாக்குகள் சேகரித்தார்.

அப்போது அவருடன் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை, தூத்துக்குடி மேற்கு பகுதி செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் காசிராஜன், ராஜ் நாராயணன் மற்றும் அப்துல் காதர், அமானுல்லா, சித்திக், இஸ்மத், நிஷா உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story