கால்நடைகளுக்கான தீவன செலவு உயர்வால் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி வழங்க வேண்டும் என்று ஆவின் நிர்வாகத்துக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

கால்நடைகளுக்கான தீவன செலவு உயர்வால் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி வழங்க வேண்டும் என்று ஆவின் நிர்வாகத்துக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
x

கால்நடைகளுக்கான தீவன செலவு உயர்வால் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி வழங்க வேண்டும் என்று ஆவின் நிர்வாகத்துக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

திருப்பூர்

பால் கொள்முதல் விலை

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை மனுக்கள் மூலமாக அளித்து பேசினார்கள்.

காளிமுத்து (தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம்) :-

திருப்பூர் மாவட்டத்தில் கால்நடை வளர்த்து பால் உற்பத்தி செய்து ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்கி வருகிறார்கள். தற்போது கால்நடைகளுக்கு தீவனப்பொருட்கள் விலை உயர்ந்து விட்டது. ஒரு மாட்டுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.300-க்கும் தீவன செலவாகிறது. மாடு ஒன்று அதிகபட்சமாக 8 லிட்டர் பால் கொடுக்கிறது. ஆவின் நிறுவனம் லிட்டருக்கு ரூ.32 மட்டுமே கொடுக்கிறார்கள். இதனால் பால் உற்பத்தி விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கிறார்கள். தனியார் பால் நிறுவனத்தினர் லிட்டர் ரூ.45-க்கு வாங்குகிறார்கள். இதனால் விவசாயிகள் தனியார் நிறுவனங்களை தேடி செல்கிறார்கள். இதன் காரணமாக மக்களுக்கு குறைந்த விலைக்கு கிடைக்க வேண்டிய ஆவின் பால் கிடைக்காமல் போகும் நிலை ஏற்படும். ஆவின் நிறுவனம் பால் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும்.

மும்முனை மின்சாரம்

குண்டடம், தாராபுரம் வடக்கு பகுதியில் மும்முனை மின்சாரம் சரிவர கிடைப்பது இல்லை. காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரையும் மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்த மின்னழுத்தம் காரணமாக இந்த பகுதியில் மின்மோட்டார்கள் பழுது ஏற்படுகிறது. சரியான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.

தாராபுரத்தில் உள்ள தனியார் தானியமண்டி கடையில் வெள்ளை சோளம், நறிபயிர், தக்கை பூண்டு விதைகளை வாங்கி பயிரிட்டனர். இந்த விதைகள் முளைப்புத்திறன் குறைந்து விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். இதுகுறித்து புகார் தெரிவித்ததும் விதை ஆய்வாளர் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் விவசாயிகளிடம் மட்டும் அறிக்கை பெற்றுள்ளார்கள். சம்பந்தப்பட்ட தனியார் தானியமண்டி கடை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உப்பாறு அணை

மடத்துக்குளம், தாராபுரம், அலங்கியம் நெல் கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ நெல் மூட்டைக்கு தலா ரூ.40 வசூல் செய்வதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். அந்த தொகையை கொடுக்காவிட்டால் நெல்லில் குறை இருப்பதாக காரணம் காட்டி நெல்லை வாங்க மறுக்கிறார்கள். சம்பந்தப்பட்ட நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாராபுரம் உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு அதிகாலையில் எடை எந்திரங்கள் வழங்காமல் இழுத்தடிப்பதால் கொண்டு வரும் காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். இதை சரிசெய்ய வேண்டும். உப்பாறு அணையில் 12 அடி தண்ணீர் உள்ளது. இதில் பாசனத்துக்கு 6 அடி எடுக்கலாம். உப்பாறு பாசன பகுதியில் நிலத்தடி நீர் போதிய அளவு உள்ளது. தற்போது தண்ணீர் திறந்தால் வீணாகி விடும். இன்னும் 1 மாதம் கழித்து தண்ணீர் திறந்தால் ஆங்காங்கு தண்ணீரை சேமித்து விவசாயிகள் வறட்சியில்லா பாசனமாக மாற்ற முடியும். 1 மாதம் கழித்து உப்பாறு அணையில் தண்ணீர் திறக்க வேண்டும்.

உயிர்த்தண்ணீர்

ஈஸ்வர மூர்த்தி (உழவர் உழைப்பாளர் கட்சி):-

அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட கரும்பு விவசாயிகளிடம் கரும்பை வெட்டுவதற்கான ஆட்களை தயார் படுத்த வேண்டும். கூட்டுறவு ஆலை மேலாளரை பணியிடமாற்றம் செய்துள்ளனர். சீசன் முடியும் வரை அவரை பணியிடமாற்றம் செய்யக்கூடாது. அமராவதி ஆற்றில் உயிர்த்தண்ணீர் திறந்து விட வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினார்கள்.

----

Next Story