அவினாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் மான் மற்றும் மயில்களால் பயிர்கள் நாசமாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.
அவினாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் மான் மற்றும் மயில்களால் பயிர்கள் நாசமாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.
அவினாசி
அவினாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் மான் மற்றும் மயில்களால் பயிர்கள் நாசமாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.
குக்கிராமங்கள்
அவினாசி ஒன்றியத்தில் உள்ள 31 ஊராட்சிகளில் ஆயிரக்கணக்கான குக்கிராமங்கள் உள்ளன. கடந்த 40, 50 ஆண்டு களுக்கு முன் தென்னை, வாழை, மஞ்சள், நெல், கரும்பு உள்ளிட்ட விவசாயம் செழித்து வளர்ந்து எங்கு பார்த்தாலும் பச்சை கம்பளம் விரித்தாற்போல் லேசான காற்றுக்கு பயிர்கள் அசைவது ரம்மியமாக காட்சியளிக்கும்.
காலப்போக்கில் பருவமழை சரிவர பெய்யாமல் விவசாயம் நலிவடைந்த நிலையில் பலர் திருப்பூர் போன்ற நகரங்களில் வெவ்வேறு தொழில்களை நாடிச்சென்றனர். இருப்பினும் பழமையை மறவாமல் விவசாயம்தான் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அங்கம் என்ற நோக்கில் பல இன்னல்களுக்கு இடையே சில விவசாயிகள் மனம் தளராமல் விவசாயம் செய்து வருகின்றனர்.
மான்,மயில்கள்
பயிர்களை நல்லமுறையில் பாதுகாத்து இரவு விடிய விடிய கண்விழித்து தண்ணீர் கட்டி, உரம் வைத்து நல்லமுறையில் பயிர்களை பாதுகாத்து வளர்த்து வருகின்றனர்.ஆனால் காட்டுப்பகுதிகளில் சுற்றித்திரியும் மான்கள் மற்றும் மயில்கள் பயிர்களை அழித்து நாசம் செய்து விடுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
முன்பெல்லாம் தோட்டம் காடுகளில் விவசாய தொழிலுடன் ஆடு, மாடு, கோழி வளர்ப்பில் ஈடுபடுவார்கள். நாகரீக உலகத்தில் தற்போது நாட்டுக்கோழி, ஆடுகள் வளர்ப்பது மறைந்து வருகிறது. அதேசமயம் மான், மயில்கள் தோட்டத்திற்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்து விடுகிறது. அரும்பாடுபட்டு வளர்த்த பயிர்கள் நாசமாவதுடன் எங்கள் பாடு வீணாகி பெருத்த இழப்பு ஏற்படுகிறது. அவினாசி ஒன்றியம் தெக்கலூர், புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் மட்டுமே மான்கள் இருந்த நிலையில் இப்போது அவினாசி ஒன்றியத்தில் 40 கி.மீ. சுற்றளவிற்கு தோட்டம் காடுகளில் மான்கள், மயில்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சிறுத்தை நடமாட்டம்
இந்த மான்கள் இருப்பதை 50 கி.மீ தொலைவில் இருக்கும் சிறுத்தைகள் மோப்ப சக்தியால் கண்டுகொள்கிறது. எனவேதான் சிறுத்தையே கண்டிராத நம் பகுதிக்குள் தற்போது சிறுத்தை நடமாட்டம் தொடங்கிவிட்டது. வாழ்நாள் முழுவதும் மான், மயில்களுடன் போராடுவது போதாதென்று தற்போது எந்த நேரத்தில் தோட்டப்பகுதிக்குள் சிறுத்தை வருமோ? என்ற அச்சத்தில் உள்ளோம்
மான், மயில்களின் தொந்தரவுக்கு அவினாசி அரசு, விவசாயத்துறை, தோட்டக்கலை துறையினரிடம் கோரிக்கை வைத்து அவர்கள் அதற்கு எந்த முயற்சியும் எடுப்பதில்லை. இதற்கு தீர்வு காண அவினாசி ஒன்றியத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்று திரண்டு சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்வது ஒன்றுதான் வழி என்று கூறினர்.
------------
மான்கள் கூட்டத்தை காணலாம்.