கள்ளிமந்தையம் அருகே பட்டை, நாமம் போட்டு விவசாயிகள் போராட்டம்


கள்ளிமந்தையம் அருகே பட்டை, நாமம் போட்டு விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 16 July 2023 2:30 AM IST (Updated: 16 July 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

கள்ளிமந்தையம் அருகே பட்டை, நாமம் போட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்

தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யக்கோரி கள்ளிமந்தையம் அருகே உள்ள தும்பிச்சிபாளையத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது. அதன்படி 11-வது நாளாக நேற்று விவசாயிகள் பட்டை, நாமம் போட்டு நூதன போராட்டம் நடத்தினார்கள். இதற்கு திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வடிவேல் தலைமை தாங்கினார். திருப்பூர் மாவட்ட அமைப்பு செயலாளர் பாலு, மாவட்ட அவைத்தலைவர் லிங்குசாமி ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

கள்ளிமந்தையம் பகுதியில், உயர் மின்கோபுரம் அமைக்க நிலம் கையகப்படுத்தியதற்கு இழப்பீடு வழங்க வேண்டும். பால் மற்றும் கண்வலி விதை உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தேங்காய்களை அரசு கொள்முதல் செய்து எண்ணெய் தயாரித்து ரேஷன்டைகள் மூலம் விற்க வேண்டும். மதுவை ஒழிக்க கள்ளுக்கடையை திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களை சுற்றியுள்ள ஏராளமான விவசாயிகள் இப்போராட்டத்தில் பஙகேற்றனர்.


Related Tags :
Next Story