தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு தேங்காய்களை உடைத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு தேங்காய்களை உடைத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்யை அரசு கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் வினியோகம் செய்ய வேண்டும், 1 கிலோ கொப்பரை தேங்காய்க்கு ரூ.130 கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும், சோப்பு தயாரிப்புக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்த உத்தரவிட வேண்டும், தென்னை மரத்தில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் தங்கராஜ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது விவசாயிகள் சிலர், தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் தேங்காய்களை உடைத்தனர். அப்போது தேங்காய்கள் உடைந்து நாலாபுறமும் சிதறியது. அரைகுறையாக உடைந்த தேங்காய்களை மீண்டும் எடுத்து விவசாயிகள் உடைத்தனர். பின்னர் அவர்கள் தங்களின் கோரிக்கை தொடர்பான மனுவை கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகனிடம் கொடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் கலெக்டர் அலுவலக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story