விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
திருப்பூர்
திருப்பூர்
திருப்பூர் மாவட்ட அகில் பாரதிய கிராஹக் பஞ்சாயத்து அமைப்பு சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று காலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன் பிள்ளை தலைமை தாங்கினார். திருப்பூர் மாவட்டம் பெத்தாம்பாளையத்தில் மக்காச்சோளம் பயிருக்கு தனியார் நிறுவனத்தின் களைக்கொல்லி பயன்படுத்தியதில் பயிர் கருகியது. அந்த மண்ணும் மலடாகி போனது. 6 மாதமாக விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காததை கண்டித்தும், மண் தரத்தை மாற்றக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த பகுதியில் 65 ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகள், குடும்பத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். விரைவில் சரி செய்யாவிட்டால் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.
Related Tags :
Next Story