கறவை மாடுகளுடன் வங்கியை விவசாயிகள் முற்றுகை
சாணார்பட்டி அருகே கறவை மாடுகளுடன் வங்கியை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
திண்டுக்கல்
சாணார்பட்டி அருகே உள்ள ராஜக்காபட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கிக்கு இன்று காலை 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கறவை மாடுகளுடன் திரண்டு வந்தனர். அப்போது அவர்கள் கூட்டுறவு வங்கியில் கறவை மாடுகள் பராமரிப்பு கடன் வழங்கப்படவில்லை எனக்கூறி திடீரென்று வங்கியை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சாணார்பட்டி போலீசார் மற்றும் வங்கி அலுவலர்கள் வந்து, போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கறவை மாடு பராமரிப்பு கடன் விரைவில் வழங்கப்படும் என்று வங்கி அலுவலர்கள் உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story