அக்கிரமிப்பு செய்து வரும் கடைகளை அப்புறப்படுத்திக் கோரி விவசாயிகள் சாலை மறியல்.
அக்கிரமிப்பு செய்து வரும் கடைகளை அப்புறப்படுத்திக் கோரி விவசாயிகள் சாலை மறியல்.
தாராபுரம
- தாராபுரம் உழவர் சந்தை முகப்பில் நூற்றுக்கணக்கான நபர்கள் கடை அமைத்து வியாபாரம் செய்து வருவதை கண்டித்து நூற்றுக்கனக்கான விவசாயிகள் காய்கறிகளை சாலையில் கொட்டி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தாராபுரத்தில் அண்ணா நகர் பகுதியில் கடந்த 25 ஆண்டு காலமாக உழவர் சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தை விவசாயிகளின் காய்கறிகளை விற்பனை செய்வதற்காக கடந்த கருணாநிதி ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது.அன்று முதல் தாராபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியான அலங்கியம் கோவிந்தாபுரம், காளிபாளையம் கொளத்துப்பாளையம் மணக்கவு உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து விவசாயிகள் அதிகாலையில் 4 மணிக்கு உழவர் சந்தைக்கு காய்கறிகளை கொண்டு வந்து விற்பனையை தொடங்குவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உழவர் சந்தையின் நுழைவு வாயிலில் சாலையில் இருபுறமும் நூற்றுக்கணக்கான நபர்கள் தரைகடை அமைத்து அதில் பல்வேறு காய்கறிகளை வைத்தை விற்பனை செய்து வருகின்றனர். இ
தனால் பொதுமக்கள் உழவர் சந்தை காய்கறி வாங்க வரும் நபர்கள் முன்புறமுள்ள கடைகளிலேயே காய்களை வாங்கி செல்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனால் உழவர்கள் சந்தைக்கு கொண்டு வரும் காய்கனிகளின் விற்பனை சரிவு தொடங்கியது. இதுகுறித்து விவசாயிகள் தோட்டக்கலை, வருவாய் துறை பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதில் ஆத்திரமடைந்த விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த காய்கறிகளை தாராபுரம் பொள்ளாச்சி சாலை சி.எஸ்.ஐ பள்ளி அருகே காய்கனிகளை சாலையில் கொட்டி மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது விவசாயிகள் தரப்பில் தாங்கள் கொண்டு வரும் காய்கறிகளை விற்பனை செய்யாமல் திருப்பி கொண்டு செல்வது தொடர்கதையாக உள்ளது. உழவர் சந்தை முகப்பில் கடை அமைத்து விற்பனை செய்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர். இதுபற்றி போலீசார் ஆர்.டி.ஓவிடம் பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவு எடுப்பதாக உறுதியளித்த பின்பு அங்கிருந்து கிளம்பி சென்றனர்.இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பொள்ளாச்சி சாலையில் பரபரப்பு ஏற்பட்டது