விவசாயிகளுக்கு பயன்படும்படியாக செயல்படுத்த வேண்டும்
விவசாயிகளுக்கு பயன்படும்படியாக செயல்படுத்த வேண்டும்
அவினாசி,
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் அவினாசியை அடுத்து தெக்கலூரில் நடந்தது.ஒன்றிய தலைவர் வேலுசாமி தலைமையில் நடந்த கூட்டத்திற்கு தெக்கலூர் பகுதி தலைவர் ஆறுச்சாமி முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மயில்சாமி, ஒன்றிய செயலாளர்ராஜகோபால் உள்ளிட்ட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அவினாசி ஒன்றியத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டுவிவசாயிகளைச் சேர்த்து கொடிக்கம்பம் பெயர் பலகை திறப்பது. அவினாசி அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குளம் குட்டைகளை திட்டத்தில் சேர்த்து உடனடியாக திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்துவது.மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை விவசாயிகளுக்கு பயன்படும் படியாக வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்வது. பயிற்களை நாசம் செய்யும் மான், மயில், பன்றி ஆகியவற்றால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவே மான் மயில் பன்றி போன்றவைகளால்விவசாயம் பாதிப்பதை தடுக்க வழிவகை செய்ய வேண்டும்.பெருகி உள்ள விசைத்தறி தொழிலுக்குமின்சார கட்டணம் உயர்வு பெரிதும் பாதிக்கிறது. எனவே உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.