பச்சை நிறமாக காட்சியளிக்கும் கோட்டை அகழிநீர்
வேலூர் கோட்டை அகழிநீர் பச்சை நிறமாக காட்சியளிக்கிறது.
வேலூர்
வேலூர்
வேலூர் மாநகரின் மையப்பகுதியில் வேலூர் கோட்டை அழகிய அகழியுடன் பிரம்மாண்டாக அமைந்துள்ளது. முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து கோட்டையின் அழகை ரசித்து செல்கின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக கோட்டை அகழியில் நீர் உயர்ந்து காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அகழி நீர் பச்சை நிறமாக மாறி காட்சியளித்தது. இதை பொதுமக்கள் வியப்பாக பார்த்துச் சென்றனர். இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகையில், பருவகால மாற்றம் காரணமாக அகழி நீரின் நிறம் பச்சையாக மாறி உள்ளது. சிறிது நாட்களுக்கு பின்னர் தானாக நிறம் பழைய நிலைக்கு மாறிவிடும். இதேபோல கடந்த பிப்ரவரி மாதமும் அகழி நீர் பச்சை நிறமாக மாறி சிறிது நாட்கள் காட்சியளித்தது என்றனர்.
Related Tags :
Next Story