ரூ.20 லட்சத்தில் தடுப்பு சுவர் கட்ட அடிக்கல் நாட்டு விழா


ரூ.20 லட்சத்தில் தடுப்பு சுவர் கட்ட அடிக்கல் நாட்டு விழா
x
தினத்தந்தி 23 Feb 2023 12:15 AM IST (Updated: 23 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராயகிரியில் ரூ.20 லட்சத்தில் தடுப்பு சுவர் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

தென்காசி

சிவகிரி:

ராயகிரி பேரூராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கணபதி ஆற்றுப் பாலத்தின் வடக்கு பகுதியில் உள்ள சாலையில் தடுப்பு சுவர் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் இந்திரா பூசைப்பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் குறிஞ்சி மகேஷ் மற்றும் கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன், பேரூர் ம.தி.மு.க. செயலாளர் சங்கையா, செயல் அலுவலர் சுதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story