நீர்த்தேக்க தொட்டி அமைக்க அடிக்கல் நாட்டு விழா


நீர்த்தேக்க தொட்டி அமைக்க அடிக்கல் நாட்டு விழா
x

பரப்பாடி அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடந்தது

திருநெல்வேலி

இட்டமொழி:

பரப்பாடி அருகே உள்ள கக்கன் நகர் தெற்கு பகுதியான ஆதவன் நகரில் இலங்குளம் ஊராட்சி மன்ற 15-வது நிதிக்குழு மானிய நிதி ரூ.9.40 லட்சம் மதிப்பில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இலங்குளம் பஞ்சாயத்து தலைவர் வி.இஸ்ரவேல் பிரபாகரன் தலைமை தாங்கி, அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர் வீரசிங்ராஜா, ஊர் பிரமுகர்கள் ஜார்ஜ், ஆபிரகாம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story