ரூ.30 லட்சத்தில் புதிய பள்ளி கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா
மானாங்கோரையில் ரூ.30 லட்சத்தில் புதிய பள்ளி கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
அய்யம்பேட்டை:
தஞ்சை அருகே மானாங்கோரை கிராமத்தில் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கூட கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி ரூ.30.5 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகளுடன் கூடிய புதிய பள்ளி கூட கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். இதில் தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர் முரசொலி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, தஞ்சை ஒன்றியக்குழு தலைவர் வைஜெயந்திமாலா கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் மணிரெத்தினம் வரவேற்றார். நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் பாலசுப்ரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், மதியரசன், உதவி பொறியாளர்கள் அம்பிகாபதி, குமார், ஒன்றிய கவுன்சிலர் காமராஜ், ஊராட்சி ஒருங்கிணைப்பாளர் முருகேசன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆசிரியைகள், கிராமமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் சரண்ராஜ் நன்றி கூறினார்.