திருவண்ணாமலை-அரூர் இடையே நான்கு வழி சாலை பணிகள் தீவிரம்


திருவண்ணாமலை-அரூர் இடையே நான்கு வழி சாலை பணிகள் தீவிரம்
x

தண்டராம்பட்டு வழியாக திருவண்ணாமலையிலிருந்து அரூர் வரை செல்லும் நான்கு வழி சாலை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை

தண்டராம்பட்டு

தண்டராம்பட்டு வழியாக திருவண்ணாமலையிலிருந்து அரூர் வரை செல்லும் நான்கு வழி சாலை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பைபாஸ் சாலைகள்

திருவண்ணாமலைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பவுர்ணமி நாட்களிலும் திருவிழா காலங்களிலும் தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்களிலிருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கார் வேன் பஸ்களில் திருவண்ணாமலைக்கு வருகின்றனர்.

இதால் அதுபோன்ற நாட்களில் போக்குவரத்து அதிகம் இருக்கும். தண்டராம்பட்டு, தானிப்பாடி போன்ற பெரிய கிராமங்கள் வழியாக ஊருக்குள் வருகிற போது போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

இதனை தவிர்க்க இந்த சாலையை பைபாஸ் சாலைகளுடன் கூடிய நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவண்ணாமலையில் இருந்து தண்டராம்பட்டு வழியாக அரூர் வரை நான்குவழிச்சாலை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பணிகள் தீவிரம்

இதற்காக திருவண்ணாமலை இருந்து தண்டராம்பட்டு வரை செல்லும் சாலையில் இருபுறமும் இருந்த புளிய மரங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டு தரைப்பாலங்கள் அமைத்து நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆங்காங்கே ரோட்டின் குறுக்கே சாத்தனூர் அணையில் இருந்து வரும் குடிநீர் குழாய் இணைப்பு குழாய்கள் பழுது பார்க்கப்பட்டு தரைப்பாலங்கள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளுக்காக ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு ரூ.3 கோடி முதல் ரூ.5 கோடி ரூபாய் வரை செலவிடப்படுகிறது. இந்த சாலை விரிவாக்க பணியில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story