கடையை சேதப்படுத்தியவருக்கு 4 ஆண்டுகள் சிறை


கடையை சேதப்படுத்தியவருக்கு  4 ஆண்டுகள் சிறை
x

மயிலாடுதுறையில் கடையை சேதப்படுத்தியவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை;

மயிலாடுதுறை காவிரி பாலக்கரை பகுதியில் பஞ்சவர்ணம் என்பவர் நடமாடும் உணவகம் நடத்தி வந்தார். கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ந் தேதி அவரது கடைக்கு பக்கத்தில் டீக்கடை நடத்தி வந்த கொளஞ்சிநாதன் (வயது48) என்பவர் இட்லிகடையை அகற்ற சொல்லி தகராறு செய்து நடமாடும் இட்லிக்கடையை உடைத்து சேதப்படுத்தி, காவிரி ஆற்றில் தள்ளியதோடு, பஞ்சவர்ணத்தையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு மயிலாடுதுறை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் கொளஞ்சிநாதனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3000 அபராதமும் விதித்து நீதிபதி இளங்கோ தீர்ப்பு கூறினார். அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராம.சேயோன் ஆஜரானார்.


Next Story