குடிபோதையில் பாட்டிலால் மண்டை உடைப்பு; 2 பேர் கைது
மணல்மேடு அருகே குடிபோதையில் பாட்டிலால் மண்டை உடைக்கப்பட்ட சம்பவத்தில் பாட்டிலால் குத்து 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மணல்மேடு:
மணல்மேடு அருகே உள்ள ஆத்தூர் பாலம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் பூதங்குடி நடுத்தெருவை சேர்ந்த முத்துக்குமரசாமி மகன் அருண்குமார் (வயது 34) என்பவர் சம்பவத்தன்று மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு தமது மேட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது வழியில் வக்காரமாரி மேலத்தெருவை சேர்ந்த ஜீவா மகன் சங்கர் (23), கணேசன் மகன் தீபக்(20) மற்றும் கணேசன் மகன் கலை என்கிற ஜீவா ஆகிய 3 பேர் அமர்ந்திருந்ததாக தெரிகிறது. வாகனம் செல்ல வழி விடுமாறு அருண்குமார் கேட்டபோது ஏற்பட்ட தகராறில் அருண்குமாரை மதுபாட்டிலால் தலையில் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் தலையில் காயமடைந்த அருண்குமார் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சங்கர் மற்றும் தீபக்கைக் கைது செய்தனர். மேலும் ஜீவாவை தேடிவருகின்றனர்.