உடைப்பு ஏற்பட்ட பகுதி சீரமைப்பு: கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு
உடைப்பு ஏற்பட்ட பகுதி சீரமைக்கப்பட்டதை தொடா்ந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது.
ஈரோடு
பவானிசாகர்
பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்கால் கரையில் கடந்த 10-ந் தேதி உடைப்பு ஏற்பட்டது. இதனால் வாய்க்காலில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறி அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. இதனால் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. மேலும் பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வந்தது. இந்த பணி முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று மாலை 4 மணிக்கு கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. முதல் கட்டமாக அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
Related Tags :
Next Story