வியாபாரியிடம் ரூ.13 லட்சம் மோசடி
ஆத்தூர் அருகே வியாபாரியிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம்
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த முல்லைவாடி அருகே நாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபி. வியாபாரி. இவர் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமாரிடம் ஒரு மனு கொடுத்து உள்ளார். அதில் 2 பேர், ரூ.13 லட்சத்து 19 ஆயிரத்து 120 மதிப்பிலான மக்காச்சோளம் வாங்கினர். அதற்கான பணம் தராமல் ஏமாற்றி விட்டனர். எனவே மக்காச்சோளத்திற்கான பணத்தை பெற்றுதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story