ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டரின் மகளுக்கு செய்த சீர்வரிசை பொருட்களை திருப்பித்தராமல் மோசடி


ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டரின் மகளுக்கு செய்த சீர்வரிசை பொருட்களை திருப்பித்தராமல் மோசடி
x
தினத்தந்தி 11 May 2023 12:15 AM IST (Updated: 11 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டரின் மகளுக்கு செய்த சீர்வரிசை பொருட்களை திருப்பித்தராமல் மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விழுப்புரம்

விழுப்புரம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாஸ் காஞ்சிநகர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன் (வயது 60). இவர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மகள் இந்துமதியை விழுப்புரம் கமல கன்னியப்பன் நகரை சேர்ந்த நடராஜன் மகன் ராஜேஷ் என்பவருக்கு கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு நிரஞ்சன் (9), விஜயலட்சுமி (7), மகாலட்சுமி (7) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்த திருமணத்தின்போது இந்துமதிக்கு அவரது பெற்றோர் 50 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை பொருட்களை கொடுத்திருந்தனர்.

2 பேர் மீது வழக்குப்பதிவு

இந்நிலையில் ராஜேஷ், கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரான்ஸ் நாட்டுக்கு வேலைக்கு சென்றுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிய அவர், இந்துமதியுடன் வாழ முடியாது என கூறிவந்துள்ளார். இதனால் கோவிந்தராஜன், தனது மகள் வீட்டிற்கு சென்று திருமணத்திற்கு தான் செய்த சீர்வரிசை பொருட்களை தரும்படி அவரது கணவரிடம் கேட்டுள்ளார்.

அதற்கு ராஜேஷ், அவரது தந்தை நடராஜன் ஆகிய இருவரும் சீர்வரிசை பொருட்களை கொடுக்காமல் ஏமாற்றி வருகின்றனர். இதுகுறித்து கோவிந்தராஜன், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் ராஜேஷ், நடராஜன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story