போலி வாரிசு சான்றிதழை காட்டி குத்தகை தொகை ரூ.25 லட்சம் பெற்று மோசடி; 6 பேர் மீது வழக்கு


போலி வாரிசு சான்றிதழை காட்டி குத்தகை தொகை ரூ.25 லட்சம் பெற்று மோசடி; 6 பேர் மீது வழக்கு
x

போலி வாரிசு சான்றிதழை காட்டி குத்தகை தொகை ரூ.25 லட்சம் பெற்று மோசடி செய்ததாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி

திருச்சி மண்ணச்சநல்லூரை சேர்ந்தவர் நிர்மலா (வயது 55). இவர் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகார் மனுவில், "எனது தாய் அங்கம்மாள். அவரது சகோதரர் சுப்பிரமணி. இவர்களுடைய தந்தை ஆறுமுகம். இவர் உறையூர் பாண்டமங்கலத்தில் உள்ள 2 ஏக்கர் நிலத்தை உறையூரை சேர்ந்த சரவணன், தனபால், சாந்தி ஆகியோரிடம் இருந்து குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். பின்னர் ஆறுமுகம் இறந்துவிட்டார். இதையடுத்து சுப்பிரமணி எனது தாய் அங்கம்மாளை மறைத்து, ஆறுமுகத்தின் வாரிசு தான் மட்டுமே என போலி வாரிசு சான்றிதழ் பெற்று குத்தகை தொகை ரூ.25 லட்சத்தை பெற்றுக்கொண்டு, மேற்படி நிலத்துக்கான குத்தகை பாத்திய விடுதலை பத்திரத்தை கொடுத்துள்ளார். இதற்கு சுப்பிரமணியின் மனைவி பானுமதியும் உடந்தையாக இருந்துள்ளார். இது பற்றி அறிந்து நான் அவரிடம் கேட்டபோது, எனக்கு மிரட்டல் விடுத்தனர். ஆகவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். புகாரின்பேரில் சுப்பிரமணி, பானுமதி, சரவணன், தனபால், சாந்தி, விக்னேஷ்வரன் ஆகிய 6 பேர் மீது மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story