முகநூலில் வேறொருவரின் செல்போன் எண்ணை பதிவு செய்து மோசடி; வாலிபர் கைது
முகநூலில் வேறொருவரின் செல்போன் எண்ணை பதிவு செய்து மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி
பாளையங்கோட்டை பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர் முத்துசெல்வம் (வயது 35). இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த சில நாட்களாக வெவ்வேறு எண்களில் இருந்து அழைப்பு வந்துள்ளது. இதுகுறித்து அவர் நெல்லை மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் பெருமாள்புரம் ரெட்டியார்பட்டி ஜே.ஜே. நகரை சேர்ந்த வெட்டும்பெருமாள் மகன் தங்கராஜ் (32) என்பவர் முகநூலில் போலி கணக்கு தொடங்கி, முத்துசெல்வத்தின் செல்போன் எண்ணை குறிப்பிட்டு, அந்த எண்ணிற்கு இலவசமாக வீடியோ கால் பேசலாம் என்றும், அதில் ஒரு பெண்ணின் புகைப்படத்தை பதிவு செய்து இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீணா, இணையதளத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து தங்கராஜை கைது செய்தார்.
Related Tags :
Next Story