தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.1 கோடி கடன் பெற்று மோசடி; தொழில் அதிபர் கைது


தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.1 கோடி கடன் பெற்று மோசடி; தொழில் அதிபர் கைது
x
தினத்தந்தி 11 Feb 2023 12:15 AM IST (Updated: 11 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் தனியார் நிதிநிறுவனத்தில் கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் ரூ.1 கோடி மோசடி செய்ததாக தொழில் அதிபர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்தவர் சிவபெருமாள் மகன் சிவசங்கர் (வயது 56). தொழில் அதிபர். இவர் சென்னையில் உள்ள தங்களது அனைத்து வீட்டு உபயோகப் பொருட்கள் வினியோக நிறுவன அபிவிருத்திக்காக தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்து பல்வேறு சொத்து ஆவணங்கள், உறுதிமொழி பத்திரங்கள் கொடுத்து பல்வேறு தவணையாக கடன் பெற்று உள்ளார். இதற்கு அசல் மற்றும் வட்டி சேர்த்து ரூ.1 கோடியே 8 லட்சத்து 61 ஆயிரத்து 20-க்கான காசோலைகளை சிவசங்கர் கொடுத்து உள்ளார்.

பின்னர் அந்த காசோலை தொலைந்து விட்டதாக வங்கியில் தெரிவித்து, அதை பணமாக்க விடாமல் தடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நிதிநிறுவனத்தினர் கேட்டபோது, அவர்களுக்கு மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து நிதிநிறுவன மேலாளர் பிரபாகரன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் புகார் மனு கொடுத்தார். அதன்பேரில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, ரூ.1 கோடி மோசடி செய்ததாக சிவசங்கரை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தனர்.


Next Story