ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி விவசாயியிடம் ரூ.18¾ லட்சம் மோசடி: 6 பேர் மீது வழக்கு


ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி  விவசாயியிடம் ரூ.18¾ லட்சம் மோசடி: 6 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 17 Dec 2022 11:37 PM IST (Updated: 17 Dec 2022 11:38 PM IST)
t-max-icont-min-icon

ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி விவசாயியிடம் ரூ.18¾ லட்சம் மோசடி செய்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர்

ரூ.18¾ லட்சம் மோசடி

கரூர் அரங்கநாதன் பேட்டையை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 60). விவசாயி. இவருக்கு பசுபதிபாளையத்தை சேர்ந்த பாலு என்பவர் அறிமுகமாகி உள்ளார். அப்போது பாலு தான் ெரயில்வேயில் ஏ.சி. மெக்கானிக்காக பணிபுரிந்து வருவதாகவும், தனக்கு ெரயில்வே உயர் அதிகாரியாக பணிபுரிந்து வரும் ஒருவர் நன்கு பழக்கம் உள்ளதாகவும், அவர் மூலம் ெரயில்வேயில் வேலை வாங்கி தரமுடியும் என வெள்ளியங்கிரியிடம் கூறியுள்ளார்.

இதனை நம்பிய வெள்ளியங்கிரி தனது மகன் மற்றும் மருமகளுக்கு ரெயில்வேயில் வேலை வாங்கி தரக்கோரி பாலுவிடம் மொத்தம் ரூ.18 லட்சத்து 85 ஆயிரம் கொடுத்துள்ளார். இதையடுத்து பணத்தை பெற்று கொண்ட பாலு ரெயில்வேயில் எந்த வேலையும் வாங்கி தரவில்லை. இதனால் பாலு பணத்தை பெற்று மோசடி செய்தது வெள்ளியங்கிரிக்கு தெரியவந்தது.

6 பேர் மீது வழக்குப்பதிவு

இதுகுறித்து வெள்ளியங்கிரி கொடுத்த புகாரின்பேரில், பசுபதிபாளையத்தை சேர்ந்த பாலு, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த செல்வம், கண்ணன், திருச்சி மாவட்டம் பொன்மலைபட்டியை சேர்ந்த பாண்டியன், குளித்தலையை சேர்ந்த நாகவேல், பெட்டவாய்த்தலையை சேர்ந்த குமார் ஆகிய 6 பேர் மீது கரூர் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story