ஆன்லைனில் கடன் தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.25 ஆயிரம் மோசடி


ஆன்லைனில் கடன் தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.25 ஆயிரம் மோசடி
x
தினத்தந்தி 21 July 2023 12:15 AM IST (Updated: 21 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆன்லைனில் கடன் தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.25 ஆயிரம் மோசடியில் ஈடுபட்ட மா்மநபரை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனா்.

விழுப்புரம்

மேல்மலையனூர் அருகே ஈயக்குணத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 29). இவருடைய செல்போனை அடையாளம் தெரியாத நபர், 3 வெவ்வேறு எண்களில் இருந்து தொடர்புகொண்டு பேசினார். அப்போது அந்த நபர், தான் தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், கடன் தேவையெனில் உங்களுடைய விவரங்களை அனுப்பி வைக்குமாறும் கூறியதன்பேரில் ராஜ்குமார் தனது விவரங்களை அனுப்பியுள்ளார். பின்னர் ரூ.5 லட்சம் கடன் தருவதாகவும், அதற்காக கடனுதவியை வங்கி கணக்கில் செலுத்த குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் வைத்திருக்க வேண்டும் என கூறியுள்ளார். இதை நம்பிய ராஜ்குமார், ரூ.25 ஆயிரத்தை தனக்கு தெரிந்த சிலரிடமிருந்து கடனாக பெற்று தனது வங்கி கணக்கில் டெபாசிட் செய்து அதனை 'ஸ்கிரீன்ஷாட்' எடுத்து அந்த நபருக்கு அனுப்பியுள்ளார். அதன் பிறகு ராஜ்குமாரை தொடர்புகொண்ட மர்ம நபர், 10 நிமிடங்களில் கடன் தொகை, வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனக்கூறி ஏ.டி.எம். அட்டை எண், காலாவதி ஆகும் தேதி, ரகசிய எண், ஓ.டி.பி. எண் ஆகியவற்றை கேட்டு பெற்றுக்கொண்டார். இவற்றை கொடுத்த சில மணி நேரத்தில் ராஜ்குமாரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.24 ஆயிரத்து 854-ஐ ஒரே தவணையில் மர்ம நபர் அபேஸ் செய்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ராஜ்குமார், விழுப்புரம் சைபர்கிரைம் பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story