ஏலச்சீட்டு நடத்தி ரூ.35 லட்சம் மோசடி; 4 பேர் மீது வழக்கு


ஏலச்சீட்டு நடத்தி ரூ.35 லட்சம் மோசடி; 4 பேர் மீது வழக்கு
x

திருச்சியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.35 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து, ஒருவரை கைது செய்தனர்.

திருச்சி

திருச்சியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.35 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து, ஒருவரை கைது செய்தனர்.

ஏலச்சீட்டு

திருச்சி ஏர்போர்ட் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் மும்தாஜ். இவரது மகள் நிலோபர், மகன் அப்துல் மஜீத், மருமகன் பாபர் அலி. இவர்கள் 4 பேரும் 30 பேரை சேர்த்து ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஏலச்சீட்டில் ஏலம் எடுத்தவர்களுக்கு நீண்ட நாட்களாக பணம் வழங்காமல் இருந்து வந்துள்ளனர். இதையடுத்து ஏலம் எடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்த நிலையில், திடீரென 4 பேரும் சில நாட்களுக்கு முன்பு தலைமறைவாகினர்.

இந்த நிலையில் மும்தாஜின் மருமகன் பாபர் அலி அவரது வீட்டில் இருந்து மினி லாரியில் பொருட்களை ஏற்றிக்கொண்டிருந்தபோது, ஏலச்சீட்டுக்கு பணம் செலுத்தியவர்கள், பாபர் அலியை முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் பாபர் அலியை ஏர்போர்ட் போலீசில் ஒப்படைத்தனர்.

கைது

மேலும் ஏலச்சீட்டு நடத்தி ரூ.35 லட்சம் மோசடி செய்ததாக அவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாபர் அலியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story