அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி


அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 10 April 2023 12:30 AM IST (Updated: 10 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

போடியில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி செய்த அரசு பஸ் டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேனி

போடி சுப்புராஜ் நகர் புதுக்காலனியை சேர்ந்தவர் ராஜா (வயது 56). இவர் போடி நகர் போலீஸ்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், போடி சுப்பிரமணிய சுவாமி கோவில் வடக்கு தெருவை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் நாகராஜ் என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர், தேவாரம் அரசு போக்குவரத்து கழக கிளை அலுவலகத்தில் வேலை செய்வதாகவும், உயர் அதிகாரிகளை தெரியும் என்றும் கூறினார். பின்னர் எனது மகனுக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, கடந்த 2018-ம் ஆண்டு ரூ.4 லட்சம் வாங்கினார். அதற்கு ரூ.50 மதிப்பிலான பத்திரத்தில் எழுதி கொடுத்தார். 5 ஆண்டுகள் ஆகியும் வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் நாகராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story