பெண்ணிடம் ரூ.4¾ லட்சம் மோசடி


பெண்ணிடம் ரூ.4¾ லட்சம் மோசடி
x

பெண்ணிடம் ரூ.4¾ லட்சம் மோசடி செய்யப்பட்டது.

திருச்சி

திருச்சி இ.பி.ரோடு கீழ காசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் வைஷாலி (வயது 25). இவர் சம்பவத்தன்று இணையதளம் மூலம் தொழில் தொடங்க பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் வைஷாலியை செல்போனில் தொடர்பு கொண்டு ஒருவர் பேசினார். அப்போது அவருக்கு செல்போனுக்கு ஒரு லிங்க் அனுப்பினார். அதன் அடிப்படையில் அவர் கடந்த ஆகஸ்டு மாதம் ரூ.4 லட்சத்து 74 ஆயிரத்து 594-ஐ இணையதளம் மூலம் முதலீடு செய்துள்ளார். இதையடுத்து அவருக்கு வந்த செல்போன் அழைப்பை மீண்டும் தொடர்பு கொண்ட போது எந்த பதிலும் இல்லை. மேலும் முதலீடு செய்த பணமும் திரும்பி வராததால் தான் ஏமாற்றப்படுவதை அறிந்த வைஷாலி திருச்சி மாநகர சைபர் கி்ரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story