ஏ.டி.எம்.மில் பால் வியாபாரியிடம் ரூ.40 ஆயிரம் மோசடி
ஏ.டி.எம்.மில் பால் வியாபாரியிடம் ரூ.40 ஆயிரம் மோசடி நடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர்
ஏ.டி.எம்.மில் பால் வியாபாரியிடம் ரூ.40 ஆயிரம் மோசடி நடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூரை அடுத்த தென்னம்பட்டு மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 60). பால் வியாபாரி. சில தினங்களுக்கு முன்பு ஆம்பூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதற்காக இவர் சென்று உள்ளார். அப்போது அங்கு நின்றிருந்த ஒருவரிடம் பணம் எடுத்து தரும்படி கேட்டுள்ளார். அதற்கு அந்த நபரும் சம்மதித்து ஜெயபாலிடம் ஏ.டி.எம்.கார்ைட வாங்கினார்.
அதனை ஏ.டி.எம். எந்திரத்தில் செலுத்தியபோது பணம் இல்லை என வருவதாக கூறி விட்டு ஜெயபாலிடம் வேறு ஒரு ஏ.டி.எம்.கார்டை கொடுத்தார். அதனை வாங்கிக்கொண்டு ஜெயபால் அங்கிருந்து சென்று விட்டார்.சிறிது நேரத்தில் ஜெயபாலின் செல்போனுக்கு வந்த குறுந்தகவலில் உங்கள் கணக்கில் இருந்து ரூ.40ஆயிரம் எடுத்துள்ளதாக வந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெயபால் இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ரூ.40 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு வேறு ஏ.டி.எம்.கார்டை கொடுத்து தலைமறைவானவரை ஏ.டி.எம். மையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.