பணம் எடுக்க வந்த பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.41 ஆயிரம் மோசடி


பணம் எடுக்க வந்த பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.41 ஆயிரம் மோசடி
x

பணம் எடுக்க வந்த பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.41 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர்


விருதுநகர் அல்லம்பட்டி அனுமன் நகரை சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 38). இவர் இந்நகர் தெப்பம் பஜாரில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுப்பதற்கு சென்றார். எந்திரத்திலிருந்து பணம் எடுக்க தெரியாத நிலையில் அங்கு நின்று கொண்டிருந்த 35 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து ரூ.1,500 எடுத்து தரக்கோரினார். அப்போது உடன் வந்த 7 வயது பேரன் வாந்தி எடுத்ததால் அந்த பெண்ணிடம் இருந்து ரூ.1500 மட்டும் பெற்றுக் கொண்டு ஏ.டி.எம். கார்டைபெற நினைவில்லாமல் சென்று விட்டார். இந்தநிலையில் கடந்த 18-ந் தேதி இவரது கணக்கிலிருந்து ரூ.2,500 எடுத்ததாக செல்போனில் குறுஞ்செய்தி வந்தவுடன் இவர் வங்கிக்கு சென்று தனது கணக்கு புத்தகத்தை பதிவு செய்த போது இவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.41 ஆயிரம் பல தவணைகளாக எடுத்திருப்பது தெரியவந்தது. இதுபற்றி செல்லம்மாள் கொடுத்த புகாரின் பேரில் இந்நகர் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Related Tags :
Next Story