பெண்ணிடம் நூதன முறையில் ரூ.6½ லட்சம் மோசடி


பெண்ணிடம் நூதன முறையில் ரூ.6½ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 11 Nov 2022 12:15 AM IST (Updated: 11 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

நண்பரிடம் பறிமுதல் செய்த பரிசு பொருட்ளை விடுவிப்பதாக கூறி கோவை பெண்ணிடம் நூதன முறையில் ரூ.6½ லட்சம் மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோயம்புத்தூர்


நண்பரிடம் பறிமுதல் செய்த பரிசு பொருட்ளை விடுவிப்பதாக கூறி கோவை பெண்ணிடம் நூதன முறையில் ரூ.6½ லட்சம் மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வாட்ஸ்-அப் மூலம் பேசினார்

கோவையை அடுத்த இருகூர் பவர்ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். இவருடைய மனைவி பேபி (வயது 57). இவர் கோவையில் தனியார் பத்திரம் எழுதும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவருடைய செல்போன் வாட்ஸ்-அப்புக்கு ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார்.

அவர், தனது பெயர் ஜேம்ஸ் எட்வின், இங்கிலாந்தில் டாக்டராக இருப்பதாக தமிழ் கலந்த ஆங்கிலத்தில் பேசி உள்ளார்.

மேலும் அவர், தமிழ்நாடு, அதிலும் குறிப்பாக கோவை எனக்கு மிகவும் பிடித்த இடம் என்பதால் வீடு கட்டி குடியேற முடிவு செய்து உள்ளதாக கூறி உள்ளார்.

இந்தியா வருவதாக கூறினார்

அதை நம்பிய பேபி, தான் பத்திரம் எழுதும் அலுவலகத்தில் வேலை செய்து வருவதாக கூறி உள்ளார். உடனே அவர், கோவை யில் எனக்கு வீடு கட்டுவதற்கு உரிய ஏற்பாடுகளை நீங்களே செய்து கொடுங்கள்.

நான் கோவை வரும்போது உங்களுக்கு பரிசு பொருட்களை வாங்கி வருகிறேன் என்று கூறி உள்ளார்.

அதன்படி வீடு கட்டுவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்த பேபி கடந்த மாதம் ஜேம்ஸ் எட்வினின் வாட்ஸ்-அப்புக்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் நான், நவம்பர் மாதம் 2-ந் தேதி இந்தியா வருகிறேன்.

அப்போது உங்களுக்கு பரிசு பொருட் கள் கொண்டு வருகிறேன் என்று மீண்டும் கூறி உள்ளார்.

பரிசு பொருட்கள்

இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி பேபியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.

அதில் பேசிய நபர், டெல்லி விமான நிலையத் தில் இருந்து சுங்கவரித்துறை அதிகாரி பேசுவதாகவும், இங்கிலாந் தில் இருந்து வந்த ஜேம்ஸ் எட்வின் ரூ.87 லட்சம் பரிசு பொருட்க ளை அனுமதி இல்லாமல் கொண்டு வந்து உள்ளதால் ரூ.6 லட் சத்து 45 ஆயிரம் அபராதம் விதித்து உள்ளோம்.

அந்த தொகை யை செலுத்த வில்லை என்றால் பரிசு பொருட்கள் அனைத்தை யும் பறிமுதல் செய்து விடுவோம் என்று கூறி உள்ளார்.

ரூ.6½ லட்சம் மோசடி

மேலும் அந்த தொகையை நாங்கள் அனுப்பும் லிங்கிற்கு நீங்கள் அனுப்பினால் அவரை விடுவிப்பதாக கூறி உள்ளார். இதையடுத்து பேபியின் செல்போனுக்கு ஒரு லிங்க் வந்தது.

அதை அழுத்தி ரூ.6 லட்சத்து 45 ஆயிரத்தை பேபி செலுத்தினார்.

அதன்பிறகு அவர், ஜேம்ஸ் எட்வினின் வாட்ஸ்-அப்புக்கு தொடர்பு கொண்டு பேசினார். அதற்கு அவர், நான் தற்போது விமான நிலையத்தில் இருப்பதால் வெளியே வந்த பிறகு பேசுகி றேன் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

விசாரணை

ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் பேபியை தொடர்பு கொள்ள வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பேபி, ேஜம்ஸ் எட்வினின் வாட்ஸ்-அப்புக்கு மீண்டும் பலமுறை தொடர்பு கொண்டார். ஆனால் அவர் எடுத்து பேசவில்லை.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பேபி கொடுத்த புகாரின் பேரில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேபியிடம் நூதன முறையில் மோசடி செய்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story