வாலிபரிடம் ரூ.85 ஆயிரம் மோசடி


வாலிபரிடம் ரூ.85 ஆயிரம் மோசடி
x

வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.85 ஆயிரம் பெற்று மோசடி செய்தவர் மீது தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருச்சி

வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.85 ஆயிரம் பெற்று மோசடி செய்தவர் மீது தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வெளிநாட்டு வேலை

திண்டுக்கல் மாவட்டம் செல்லமான்தடி பகுதியை சோ்ந்தவர் இளையராஜா(வயது 33). இவர் வெளிநாட்டு வேலைக்கு செல்ல முயற்சி செய்து வந்தார். இதற்காக அவர் திருச்சி தில்லைநகர் 6-வது கிராஸ் பகுதியில் இயங்கி வந்த கன்சல்டன்சியை தொடர்பு கொண்டார்.

அப்போது அங்கிருந்த திருச்சி மேலசிந்தாமணி பகுதியை சோ்ந்த ஷாநவாஷ்(39) என்பவர் வெளிநாட்டில் வேலை இருப்பதாகக் கூறியுள்ளார். இதற்கு ரூ.85 ஆயிரம் செலுத்தவேண்டும் என்றும் தெரிவித்தார். இதனை நம்பி இளையராஜா பணத்தை ஷாநவாஷிடம் கொடுத்துள்ளார்.

போலி விசா

பணத்தை பெற்றுக்கொண்ட பின்னர் ஷாநவாஷ் போலி விசாவை இளையராஜாவிடம் வழங்கியதாகத் தெரிகிறது. பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த இளையராஜா தில்லைநகர் போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரத்தினவள்ளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story