ரூ.23 லட்சம் மோசடி; கட்டிட பொறியாளர் மீது வழக்கு


ரூ.23 லட்சம் மோசடி; கட்டிட பொறியாளர் மீது வழக்கு
x

ரூ.23 லட்சம் மோசடி; செய்ததாக கட்டிட பொறியாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி

திருச்சி, எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி ஆனந்தலட்சுமி. குமார் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இவர்கள் கே.கே. நகர் பகுதியில் இடம் வாங்கி அதில் வீடுகட்டும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். ஓலையூர், செட்டிநாடு கார்டன் பகுதியைச் சேர்ந்த பாரதிராஜா (வயது 42) என்பவர் அந்த வீட்டு கட்டுமானப் பணிகளை ஏற்று நடத்தி வந்தார். இதற்காக ரூ.46 லட்சம் கொடுத்துள்ளதாகவும், ஆனால் ரூ.23 லட்சம் பெறுமானமுள்ள பணிகள் மட்டுமே மேற்கொண்டுள்ளதாகவும், மீதி பணிகளை காலம் தாழ்த்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பொறியாளர் பாரதிராஜாவிடம் கேட்டபோது, அவர் முறையாக பதில் அளிக்கவில்லையாம். எனவே, மீதி ரூ.23 லட்சத்தை கொடுத்துவிடுமாறு கேட்டபோது, அவர் பணம் தர மறுத்ததுடன், மிரட்டல் விடுத்து பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து ஆனந்தலட்சுமி கே.கே. நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story