ரூ.33 லட்சம் செலவில் இலவச குளியலறை, கழிப்பறை திறப்பு


ரூ.33 லட்சம் செலவில் இலவச குளியலறை, கழிப்பறை திறப்பு
x

பண்பொழி திருமலைகுமார சுவாமி கோவிலில் ரூ.33 லட்சம் செலவில் இலவச குளியலறை, கழிப்பறை திறக்கப்பட்டது.

தென்காசி

பண்பொழி திருமலைகுமார சுவாமி கோவிலில் தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திருமணங்களை நடத்தி வருகிறார்கள். மேலும் திருவிழா காலங்களில் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக இந்த கோவிலில் ரூ.33 லட்சம் செலவில் நவீன இலவச குளியலறை மற்றும் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பண்பொழி பேரூராட்சி தலைவர் ராஜராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக விழாவிற்கு வந்தவர்களை கோவில் உதவி ஆணையர் கோமதி வரவேற்றார்.




Next Story