185 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்


185 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
x
தினத்தந்தி 21 Sept 2022 12:15 AM IST (Updated: 21 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அரசு பள்ளியில் 185 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் த.பி.சொ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சுந்தரகுமார் தலைமை தாங்கினார். கீழப்பாவூர் யூனியன் தலைவி காவேரி, மாவட்ட கவுன்சிலர்கள் சாக்ரடீஸ், சுப்பிரமணியன், பஞ்சாயத்து தலைவர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் கலந்து கொண்டு 185 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினர்.

இதில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் சீனித்துரை, ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜேஸ்வரி, தர்மராஜ், நகர காங்கிரஸ் தலைவர் சிங்ககுட்டி, பேரூராட்சி துணைத்தலைவர் ராஜசேகர், காங்கிரஸ் வட்டார பொருளாளர் குமார் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story