375 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்


375 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
x

கெஜல்நாயக்கன்பட்டி பள்ளிகளில்375 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை தேவராஜி எம்.எல்.ஏ. வழங்கினார்.

திருப்பத்தூர்

கந்திலி தெற்கு ஒன்றியம், கெஜல்நாயக்கன்பட்டி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 357 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.டி.அசோக்குமார் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.எஸ்.கோவிந்தன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை தொகுதி க.தேவராஜி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் கந்திலி ஒன்றியக்குழு தலைவர் திருமதி திருமுருகன், கெஜல்நாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி சரவணன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஸ்ரீராமுலு உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். இறுதியில் கணினி ஆசிரியர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.


Next Story