375 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
375 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை கதிர்ஆனந்த் எம்.பி. வழங்கினார்.
திருப்பத்தூர்
ஆம்பூர் அருகே வடசேரி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த் கலந்துகொண்டு 375 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். தொடர்ந்து ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்வநாதன் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் புதிய டெஸ்க், பெஞ்ச் ஆகியவற்றை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாதனூர் ஒன்றியக்குழு தலைவர் சுரேஷ்குமார், துணைத்தலைவர் சாந்தி சீனிவாசன், ஆலங்காயம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஞானவேலன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மதன்குமார், மாவட்ட கல்வி அலுவலர் முனிநாதன், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் பிரியதர்ஷினி ஞானவேலன், ஆசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story