கோவில்பட்டியில் 459 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
கோவில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 459 மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 459 பேருக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அதிகாரி சின்னராசு தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் நகரசபை தலைவர் கருணாநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியை ரூத்ரத்தின குமாரி, உஷா ஜோஸ்பின், ஆசிரியர்கள் கண்ணன், பிரவீன், நகரசபை கவுன்சிலர்கள் உமாமகேஸ்வரி, உலக ராணி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story