716 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்


716 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
x

நெல்லை டவுன் கல்லணை பள்ளியில் 716 மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் சார்பில், இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் 716 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி வாழ்த்தி பேசினர். தலைமை ஆசிரியர் முத்துராஜ் வரவேற்று பேசினார். விழாவில் கவுன்சிலர் பவுல்ராஜ் மற்றும் உதவி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியர் சுப்பையா நன்றி கூறினார்.

தச்சை மண்டலம் ஸ்ரீபுரம் ஊருடையான் குடியிருப்பு சாலை பணிகள் மற்றும் நெல்லை மண்டலம் பழையபேட்டை சரக்கு வாகன முனையம் முதல் பேட்டை வரையிலான ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்கும் பணிகளை மேயர் சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது தச்சை மண்டல தலைவர் ரேவதி, செயற்பொறியாளர் வாசுதேவன், மாநகராட்சி கவுன்சிலர்கள் உலகநாதன், மாரியப்பன், அலிசேக் மன்சூர், உதவி ஆணையாளர் வெங்கட்ராமன், உதவி செயற்பொறியாளர் லெனின், பைஜூ, உதவி பொறியாளர் பட்டுராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story