மாணவிகளுக்கு இலவச சைக்கிள்


மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
x

கடையநல்லூரில் பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும், கூட்டுறவு சங்க தலைவருமான மா. செல்லத்துரை தலைமை தாங்கினார். நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், பள்ளி மேலாண்மை குழு டாக்டர் சஞ்சீவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ஜின்னி இவாஞ்சலின் ஜோஸ் வரவேற்றார். தனுஷ் குமார் எம்.பி. கலந்துகொண்டு 398 மாணவியர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வகுப்பறைகளுக்கு தேவையான 60 இருக்கைகள் மற்றம் பெஞ்சுகள் ஆகியவற்றை ரூ. 9.5 லட்சம் செலவில் தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் தி.மு.க. நகர செயலாளர் அப்பாஸ், ஆய்க்குடி பேரூராட்சி தலைவர் சுந்தர்ராஜ், வடகரை பேரூராட்சி தலைவர் ஷேக் தாவூத், கடையநல்லூர் யூனியன் துணை தலைவர் ஐவேந்திரன் தினேஷ், பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


Next Story