பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்


பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
x

சுரண்டை அருகே பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.

தென்காசி

சுரண்டை:

சுரண்டை அருகே வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை சாய் சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், பள்ளி மேலாண்மை குழு தலைவி உமா, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவி கலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுநிலை ஆங்கில ஆசிரியை பவனா பாய் குண செல்வி வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக தென்காசி எம்.எல்.ஏ. பழனிநாடார் கலந்துகொண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முதுநிலை தமிழாசிரியர் பொன்ராஜ் நன்றி கூறினார்.


Next Story