பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்


பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
x
தினத்தந்தி 4 Oct 2022 12:15 AM IST (Updated: 4 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வாசுதேவநல்லூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.

தென்காசி

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் அருகே உள்ள ராமநாதபுரம் நாடார் கமிட்டி மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாடார் உறவின்முறை தலைவர் ஜோதி ராஜன் தலைமை தாங்கினார். பள்ளி தலைவர் மாரியப்பன், உறவின்முறை செயலாளர் மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் செயலாளர் என்.எம்.எஸ்.விவேகானந்தன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலைக்குமார் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். விழாவில் வாசுதேவநல்லூர் யூனியன் தலைவர் பொன்.முத்தையா பாண்டியன், 1-வது மாவட்ட கவுன்சிலர் சந்திர லீலா, ஒன்றிய கவுன்சிலர் சரஸ்வதி, பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் பாலசுப்பிரமணியன், பள்ளி குழு மற்றும் உறவின்முறை நிர்வாக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கர் நன்றி கூறினார்.


Next Story