பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்


பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
x
தினத்தந்தி 9 Oct 2022 12:15 AM IST (Updated: 9 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி

நாலாட்டின்புத்தூர்:

கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சீத்தாமகேஸ்வரி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக கழுகுமலை பேரூராட்சி மன்றத் தலைவர் அருணா சுப்பிரமணியன்,‌ துணை தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினர்.

நிகழ்ச்சியில் இயற்பியல் ஆசிரியர் ராஜகோபால், பசுமைபடை பொறுப்பாளர் கல்யாணசுந்தரம் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story