மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்


மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
x
தினத்தந்தி 23 July 2023 12:15 AM IST (Updated: 23 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆத்தூர் ஸ்ரீ சண்முகசுந்தர நாடார் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சியில் ஆத்தூர் நகரப்பஞ்சாயத்து தலைவர் கமால்தீன், ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து ஆகியோர் கலந்துகொண்டு 350 மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினர். நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாக அலுவலர் கந்தசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் ரஞ்சித் சிங் மற்றும் நகர பஞ்சாயத்து உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story