மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
சேதுபாவாசத்திரம் ஒன்றியம் கரிசவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் திருமுடிச்செல்வன் தலைமை தாங்கினார். இதில் அசோக்குமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். இதில் ஒன்றியக்குழு தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் சுப.சேகர், ஊராட்சி மன்ற தலைவர் நாகூர் மீரா மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர், உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம மக்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளிக்கு வரும் 300 மீட்டர் பழுதடைந்த சாலையை புதிதாக அமைத்து தர வேண்டும். பள்ளிக்கு நூலகம் அமைத்து தர வேண்டும் என எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். அப்போது சாலை அமைக்கும் பணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.