மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
தஞ்சாவூர்
மெலட்டூர்
அம்மாப்பேட்டை ஒன்றியம் சாலியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அம்மாப்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் கலைச்செல்வன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். இதில் ஒன்றியக்குழு துணை தலைவர் தங்கமணி சுரேஷ்குமார், பள்ளி புரவலர் சரவணன், ஒன்றியக்குழு உறுப்பினர் மதுமதி, சாலியமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சக்தி சிவக்குமார் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story