மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
நாங்குநேரி தொகுதியில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
இட்டமொழி:
நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ரெட்டியார்பட்டி கு.ரா.அரசு மேல்நிலைப்பள்ளி, மருதகுளம் ரோசலின்ட் செல்லையா மேல்நிலைப்பள்ளி, முனைஞ்சிப்பட்டி குருசங்கர் அரசு மேல்நிலைப்பள்ளி, களக்காடு மீரானியா மேல்நிலைப்பள்ளி, களக்காடு கோமதி அருள்நெறி மேல்நிலைப்பள்ளிகளில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். முன்னதாக மருதகுளத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யும் பணியாளர்களுடைய கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் செல்லபாண்டியன், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் நளன், அம்புரோஸ், அலெக்ஸ், காளபெருமாள், களக்காடு நகர தலைவர் ஜார்ஜ் வில்சன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜ்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.