மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வேப்பலோடை அரசு தொழிற்பயிற்சியில் 84 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. ஓட்டப்பிடாரம் யூனியன் துணை தலைவர் காசிவிஸ்வநாதன் தலைமை தாங்கினார். அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் செல்லக்கனி வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, மாவட்ட கவுன்சிலர் மிக்கேல்நவமணி, பஞ்சாயத்து தலைவர் வேல்கனி, ஒன்றிய கவுன்சிலர் ராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், மாவட்ட நெசவாளர் அணி தலைவர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் உமறுப்புலவர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொழில் பயிற்சி நிலைய முதல்வர் ஏஞ்சல் விஜய நிர்மலா தலைமை தாங்கினார். புதூர் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, 120 மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிளை வழங்கினார்.