ஒட்டன்சத்திரத்தில் இலவச செஸ் பயிற்சி முகாம்
ஒட்டன்சத்திரத்தில் இலவச செஸ் பயிற்சி முகாம் தொடங்கியுள்ளது.
திண்டுக்கல்
ஒட்டன்சத்திரம் கான்பிடென்ட் அகாடமி சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச செஸ் பயிற்சி முகாம் தொடக்க விழா, ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோவில் பகுதியில் நேற்று நடைபெற்றது. இதற்கு அகாடமி செயலாளர் சண்முககுமார் தலைமை தாங்கி, பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் பயிற்சி பெறுவதற்காக 6 வயது முதல் 15 வயதிற்குட்ப்பட்ட ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இவர்களுக்கு தேசிய, மாநில, மாவட்ட அளவிலாள போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெறும் வகையில் இலவச பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாம் 5-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story