மத்திய அரசு பணி தேர்வுக்கு இலவச பயிற்சி


மத்திய அரசு பணி தேர்வுக்கு இலவச பயிற்சி
x

திருப்பத்தூரில் மத்திய அரசு பணி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு 6-ந் தேதி தொடங்குகிறது.

திருப்பத்தூர்

திருப்பத்துர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் முலம் மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. தமிழ் மொழியில் தேர்வு எழுதுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்விற்கு 10-வது வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு வருகிற 6-ந் தேதி முதல் கலெக்டர் அலுவலக தரைத்தளம் 'சி' பிளாக்கில் சிறந்த வல்லுனர்களைக் கொண்டு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சியில் பங்குபெற .https://ssc.nic.in என்ற இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். மத்திய அரசு தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள இளைஞர்கள் தங்களது பெயரினை 7904513450 என்ற எண்ணில் பதிவு செய்துக்கொள்ளலாம். இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பினை நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கலெக்டர் அமர்குஷ்வாஹா கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story